பின் கருகல் நோய்: பைட்டோபதோரா இன்பேஸ்டன்ஸ்
|
தாக்குதலின் அறிகுறிகள்:
- இந்நோய் இலைகள், தண்டுகள் மற்றும் கிழங்குகளை பாதிக்கிறது.
- நீர் கசியும் புள்ளிகள் இலைகளில் தோன்றும். பின் அதன் அளவு குறித்து அடர் பழுப்பு நிறமாக மாறி, இறுதியில் கருப்பு நிறமாகிறது.
- இலையின் பின்புறத்தில் இப்பூசணம் வெள்ளை நிறத்தில் காணப்படும்.
- இது காம்பு, தண்டு பாகத்திற்கும் பரவுகிறது.
- இதுஅடிக்கடி கணுக்களை பாதிக்கிறது.
- கணு புள்ளிகளில் தண்டு உடைந்து, செடியின் மேல்பாகம் விழுந்து விடும். அடர் பழுப்பு நிறமான புள்ளிகள் கிழங்கின் மேற்பரப்பில் பரவுகிறது.பாதிக்கப்பட்ட கிழங்குகள் துரு போன்று பழுப்பு நிறமாக மேற்பரப்பில் இருந்து நடுப்பகுதி வரை காணப்படுகிறது.
|
|
|
|
|
|
நீர் கசியும் புள்ளிகள |
|
கருப்பு நிற புள்ளிகள் |
|
வெள்ளை பூஞ்சை வளர்ச்சி |
|
|
|
|
துரு போன்று கிழங்கு |
|
பாதிக்கப்பட்ட வயல் |
|
நோய் காரணி:
பரவல் மற்றும் வாழ்வதற்கான முறை:
- பாதிக்கப்பட்ட கிழங்கு மற்றும் பாதிக்கப்பட்ட மண், தொற்றுக்கு முதன்மை காரணமாக அமைகிறது.
- நோயுற்ற கிழங்குகள், ஒரு பயிரிலிருந்து மற்றொரு பயிரில், நோய் நிலைத்து இருப்பதற்கான முக்கிய காரணியாக இருக்கிறது.
- ஸ்போராஞ்சியா காற்ற மூலம் நோய் பரவ காரணமாக அமைகிறது.
நோய் தோன்றும் சூழ்நிலைகள்:
- RH - >90 %, வெப்பநிலை 10- 25° செல்சியஸ் மற்றும் இரவு வெப்பநிலை 10°செல்சியஸ்.
- மழைக்க முன் வரும் மேகமூட்டம், குறைந்த பட்சம் 0.1 மி.லி. மழைப்பொழிவு மற்றும் மழைக்கு அடுத்து வரும் தினங்கள்
|
கட்டுப்படுத்தும் முறை:
- மேன்கோசெம் அல்லது ஸினப் 0.2% தெளிப்பான் மூலம் கிழங்குகளை நோய் தொற்றிலிருந்து தடுக்கலாம்.
- அறுவடையின் போது காயங்களைத் தவிர்ப்பதன் மூலமும் கிழங்கு மாசு தொற்றிலிருந்து தடுக்கலாம்.\
- சாகுபடிக்கு பரிந்துரைக்கப்படும் எதிர்ப்பு சக்தி கொண்ட ரகங்கள் குப்ரி நவீன், குப்ரி ஜீவன், குப்ரி அலங்கார், குப்ரி காசி காரோ மற்றும் குப்ரி மோடி.
- அறுவடைக்கு சில தினம் முன் பாதிக்கப்பட்ட இலைகளை அகற்றி பொருத்தமான களைக்கொல்லிகளைத் தெளிப்பதன் மூலம் நோயினைக்கட்டுப்படுத்தலாம்.
|
Source of Images:
http://www.apsnet.org/edcenter/intropp/lessons/fungi/Oomycetes/Article%20Images/LateBlight03.jpg
https://upload.wikimedia.org/wikipedia/commons/b/ba/Late_blight_on_potato_leaf_3.jpg
http://www.plantpath.cornell.edu/Fry/images/photos/fig1a_500.jpg
https://s3.amazonaws.com/assets.cce.cornell.edu/slides/21935/image/sized/late_blight_on_potatoes.jpg?1436974397
http://www.potatogrower.com/Images/gallery/288_1600.jpg |